சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் மாணவியிடம் அநாகரிகமாக பேசியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பேராசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதான திருமணமான ஆராய்ச்சி மாணவி, செப். 15 அன்று வேதியியல் துறை அலுவலகம் சென்றபோது துறைத் தலைவர் ராஜேந்திரன் (59) தன் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து அநாகரிகமாக பேசியதாக புகார் அளித்துள்ளார்.
மாணவியின் புகாரின் அடிப்படையில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து பல்கலை நிர்வாகம் பேராசிரியர் ராஜேந்திரனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், தேர்வுத்துறையில் சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பணிகளுக்காக வளாகத்திற்கு வரும் தொலைதூரக் கல்வி மாணவியரிடம் பல்கலை ஊழியர்கள் சிலர் பாலியல் ரீதியாக தொல்லை அளிப்பதாக வந்துள்ள தனிப்பட்ட புகார்களையும் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.





