‘ஜெம்’ கிரானைட்ஸ் தொழில் வர்த்தகர் வீரமணி மீது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
சிறுமிகளுக்கு பாலியல் வன்முறை செய்ததாக உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக வீரமணி ஏற்கனவே போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புகாரில், 2004ஆம் ஆண்டு தனது 16 வயது மகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி வீட்டிற்கு வரவழைத்து வீரமணி பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதன் பின்னர் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வழக்குடன் தொடர்புடைய ஆதாரங்கள் அல்லது தகவல்கள் இருப்பின் சிறப்பு புலனாய்வு குழுவை 9345319676 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்; வாட்ஸ் அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.





