திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றியை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட பெரியகருப்பன், சீனிவாச சேதுபதியிடம் வெறும் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து பெரியகருப்பன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தன் மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி சீனிவாச சேதுபதி மனு தாக்கல் செய்திருந்தார்.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே. இளந்திரையன், சீனிவாச சேதுபதி தாக்கல் செய்த மனுவை ஏற்று, பெரியகருப்பன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.