சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 220 மருந்துகள் தரமற்றவையாகவும், ஒரு மருந்து போலியாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் வழக்கமாக ஆய்வு செய்யப்படுகின்றன. போலி மருந்துகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்று ஆய்வில் 1,000க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. காய்ச்சல், வலி நிவாரணம், அமில எதிர்ப்பு, உயர் ரத்த அழுத்தம், சளி/கிருமித் தொற்று மற்றும் அஜீரண பிரச்னைகள் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படும் சில மருந்துகள் தரமற்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், கண்டறியப்பட்ட மருந்துகளின் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பான CDSCO-வின் https://cdsco.gov.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.





