ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக ஒலியில் பக்திப்பாடல் ஒலித்தது தொடர்பான தகராறே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

அது ஒரு சிவன் கோவில். அங்கு பூஜை செய்து வந்த அர்ச்சகர் ராமகிருஷ்ணா (63) மீது, ஒலி அதிகமாக இருப்பதை கேள்வி எழுப்பிய வாலிபருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகராறு முற்றிய நிலையில், அந்த வாலிபர் அர்ச்சகரை இழுத்து கீழே தள்ளி, தரையில் விழுந்தபின் எட்டி உதைத்து தொடர்ந்து தாக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.