ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு முக்கிய வெற்றி கிடைத்துள்ளது. மகளிர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை நீரு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.
இந்த ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் நடைபெற்று வருகிறது. நீருவின் இந்த வெற்றி, நடப்பு போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 5வது தங்கம் ஆகும்.
மேலும், இந்தப் பதக்கம் நடப்பு ஆசிய விளையாட்டில் இந்தியா பெற்ற முதல் தனிநபர் தங்கப் பதக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெற்றியுடன் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் பதக்க நிலவரம்
- தங்கம்: 5
- வெள்ளி: 21
- வெண்கலம்: 21





