மதுரை: முதல்வர் விஜய் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
கோவில் வாயிலில் அவரை, மீனாட்சி கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பட்டு சால்வை அணிவித்து வரவேற்றார். ருக்மணி, மறைந்த முன்னாள் அமைச்சர் பழனிவேல் ராஜனின் மனைவியும், முன்னாள் அமைச்சர் தியாகராஜனின் தாயாருமாவார்.
அவரிடம் முதல்வர் விஜய் நலம் விசாரித்து, கால்களில் விழுந்து ஆசி பெற்றார். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், வயதில் மூத்தவரான ருக்மணியிடம் அவர் ஆசி பெற்றது பலரின் கவனத்தை ஈர்த்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, மீனாட்சி கோவில் கும்பாபிஷேகத்துக்கு முன் ருக்மணி, குடமுழுக்கு பணிகளில் அறங்காவலர் குழு உறுப்பினர்களிடம் ஆலோசனை இல்லை என்றும், கோவில் நிர்வாகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் விமர்சித்திருந்தார். அதற்கு அமைச்சர்கள் பதிலளித்திருந்தனர்.





