சென்னை: த.வெ.க. தலைமையிலான அமைச்சரவையில் பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியாவுக்கு இடம் வழங்க முதல்வர் விஜய் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வர் விஜய் அமைச்சரவையில் ஏற்கனவே காங்கிரஸ், வி.சி.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் உள்ளனர். இந்நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த மாற்றங்களில் த.வெ.க.வைச் சேர்ந்த சில அமைச்சர்கள் நீக்கப்படலாம்; சிலரின் துறைகளும் மாற்றப்படலாம் என்ற தகவலும் உள்ளது. இதற்கிடையில் பா.ம.க.வை கூட்டணிக்குள் கொண்டு வர த.வெ.க. தரப்பில் தீவிர பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
தகவலின்படி, சவுமியாவுக்கு பள்ளிக்கல்வி அல்லது சுற்றுச்சூழல் அல்லது வனம் ஆகிய துறைகளில் ஒன்றை ஒதுக்கலாம். ஆனால் இடைத்தேர்தல் முடிவுகள் அரசியல் நிலைப்பாட்டை மாற்றக்கூடும் என்பதால், எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்றி பா.ம.க. தலைமை காத்திருக்கிறது என கூறப்படுகிறது.





