அதிமுகவை விட்டு விலகிய முன்னாள் அமைச்சர் செம்மலை, தவெக (TVK) கட்சியில் இணைந்தார். அதிமுகவிலிருந்து வெளியேறிய பின்னர் அவர் எடுத்துள்ள புதிய அரசியல் முடிவாக இது பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை (செப் 30) தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்க விஜய் வந்தார். அங்கு செம்மலை அவரை வரவேற்றார். தொடர்ந்து விஜய், செம்மலைக்கு தவெக கட்சித் துண்டை அணிவித்து கட்சியில் இணைத்தார்.

செம்மலை 1980ஆம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். பின்னர் 1984, 2001, 2016 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மேலும் 2009ஆம் ஆண்டு சேலம் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு மே மாதத்தில் உட்கட்சி பூசலை காரணமாகக் கூறி அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.