மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் தொகுதிகளில் தங்கள் தரப்பு மாபெரும் வெற்றி பெறும் என அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்தார்.
தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள நிலவரத்தைப் பார்த்தால் இரு தொகுதிகளிலும் பெரிய வெற்றி உறுதி என்றும், தாராபுரமும் மதுராந்தகமும் வரலாறு படைக்கும் என்றும் கூறினார்.
மேலும், இந்த இடைத்தேர்தல் இந்திய அளவில் வரலாற்றுச் சிறப்பு பெறும் தேர்தலாக அமையும் என்றும், தமிழக வெற்றிக்கழகத்தின் ஆட்சியை மக்கள் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
மக்கள் வரவேற்பு அதிகமாக இருப்பதாகவும், பார்க்கவும் வரவேற்கவும் பெருந்திரளாக மக்கள் கூடிவருவதாகவும் அவர் கூறினார்.




