பி1/பி2 நேர்காணலுக்கு நீண்ட காத்திருப்பு
அமெரிக்காவிற்கு சுற்றுலா மற்றும் வணிக விசாவில் செல்ல விரும்புவோருக்கு நேர்காணல் நேரம் கிடைப்பதில் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அரசு கணக்காய்வு அலுவலகத்தின் தகவலின்படி, நேர்காணல் நேரம் பெற சுமார் 346 நாட்கள் ஆகலாம்.
இந்தியாவிலிருந்து அதிக விண்ணப்பங்கள்
வேலை, கல்வி, சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் அமெரிக்காவுக்கு செல்கின்றனர். இதில் இந்தியாவிலிருந்து வரும் விண்ணப்பங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. கடந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவிலிருந்து 14.5 லட்சம் தற்காலிக விசா விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன.
குறைந்த பணியாளர் எண்ணிக்கை
இந்த அளவிலான விண்ணப்பங்களை பரிசீலிக்க இந்தியாவில் 68 துாதரக அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஒவ்வொரு அதிகாரியும் சராசரியாக 21,401 விண்ணப்பங்களை கையாள வேண்டிய நிலை உருவாகி, நேர்காணல் காத்திருப்பு மேலும் நீள்கிறது.
காத்திருப்பு நேரமும் கட்டணமும் உயர்வு
2019-க்கு முன் (கொரோனா காலத்துக்கு முன்) 42 நாட்களாக இருந்த காத்திருப்பு, தற்போது எட்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தற்காலிக விசாவுக்கு கூடுதல் கட்டணமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது: சுற்றுலா அல்லது வணிக விசாவுக்கு ₹15,500 அடிப்படை கட்டணம் செலுத்த வேண்டும்; புதிய விதியின்படி விசா ஒப்புதல் வழங்கும்போது கூடுதலாக ₹24,000 கட்டணம் செலுத்த வேண்டும்.





