ஜப்பானில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்து வருகின்றனர்.

மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இடம்பெற்ற இந்திய அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, வித்யாவுக்கு ₹75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.

ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழக வீரர்களை பாராட்டும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.