சென்னை: தன்னார்வ ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை மக்களிடையே எடுத்துச் சென்று, விழிப்புணர்வுமிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.
தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில், உயிர்களை காக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்யும் அனைவருக்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்தார். ரத்தக் கொடையாளர்கள் மனிதநேயத்தின் உயரிய மாண்பை நிலைநாட்டும் தன்னலமற்ற சேவையாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.
அறுவை சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு சூழல்களில் உயிர்களை காக்க ரத்த தானம் இன்றியமையாதது என கூறிய அவர், நாம் கொடையாக அளிக்கும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் ஒரு உயிரைக் காப்பதோடு குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையையும் பாதுகாக்கும் என்றார்.
மேலும், தன்னார்வ ரத்த தானத்தின் அவசியத்தை பரப்பி, மக்கள் அதிக அளவில் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை ஒட்டி வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், அவரது நிகரற்ற நடிப்பாற்றல், கம்பீரக் குரல் மற்றும் தமிழ்ச் சினிமாவுக்கான மகத்தான பங்களிப்புகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்கினார்.




