சிறுமியர் தொடர்பான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ள கிரானைட் தொழிலதிபர் வீரமணி உள்ளிட்ட மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

‘ஜெம் கிரானைட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த வீரமணி மீது சிறுமியர்களுக்கு பாலியல் வன்முறை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக கூறப்படும் உதவியாளர் சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திரசிம்ஹனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது. புகார்களை பெற வாட்ஸ்அப் உதவி எண்ணையும் அந்த குழு வெளியிட்டுள்ளது.

வீரமணி மீது மேலும் சிலர் புகார் தெரிவித்து வருவதாக கூறப்படும் நிலையில், வீரமணி, சாந்தி, மகேந்திரசிம்ஹன் ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.