இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார் காட்டிய சமயோசிதமும் துணிச்சலும் 9/11 போன்ற ஒரு சம்பவம் நிகழ்வதைத் தடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.
டில்லியில் நடைபெற்ற மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி (UPSC) நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அவர், நினைவு நாணயம், அஞ்சல் தலை மற்றும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார்.
அப்போது பேசிய பிரதமர், பொதுச் சேவை என்பது தேசத்தையும் மக்களையும் முதன்மையாகக் கருதும் கொள்கையில் இயங்க வேண்டும் என்றார். சேவைகளுக்காக வாரங்கள் அல்லது மாதங்கள் காத்திருக்க மக்கள் விரும்புவதில்லை; அதற்கேற்ப பொதுச் சேவை நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சுமித் மச்சார் தொடர்பான சமீபத்திய சம்பவத்தை குறிப்பிட்ட மோடி, அவரது துணிச்சல் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிப்பதாக கூறினார். மேலும், சுமித் மச்சாரின் தந்தை பூபேந்திர பாய், தாய் கீதா பெஹன், மனைவி சோனல் பெஹன் ஆகியோருடன் பேசினதாக தெரிவித்தார்.
சுமித் மச்சார் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக கூறிய பிரதமர், அவர் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெற பிரார்த்திக்கவும், இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவரை கவுரவிக்கவும் குடிமக்களிடம் கேட்டுக்கொண்டார்.





