த.வெ.க. அமைச்சரவையில் பா.ம.க. பங்கு பெறப்போவதாக வெளியாகும் தகவல்கள் “வதந்தி” என பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா நேற்று தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்ற அவர், சுவாமிக்கு பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபட்டார். பின்னர் கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சவுமியா, சட்டசபை தேர்தலுக்கு முன்பு பா.ம.க. மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டபோது இதே கோவிலில் தரிசனம் செய்ததாக கூறினார். தற்போது எம்.எல்.ஏ. ஆன பிறகு நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் வழிபட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், த.வெ.க. அமைச்சரவையில் பா.ம.க. இடம்பெறும் என்ற பேச்சுக்கு எந்த ஆதாரமும் இல்லை; அது வெறும் ஊகமே என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.