தமிழக முதல்வர் விஜயை குறித்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை ஒன்றின் போது நீதிபதிகள் பாராட்டுத் தெரிவித்தனர்.

நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வில் நடந்த விசாரணைக்கு, தமிழக அரசு வழக்கறிஞர் பி.கருணாகரன் ஆஜரானார். இதே வழக்கில் முன்பு தனிநபர் சார்பில் ஆஜராகியிருந்ததாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

தற்போது அரசு வழக்கறிஞராக இருப்பதால், முந்தைய வழக்கறிஞர் பொறுப்பை வேறு ஒருவரிடம் மாற்ற வேண்டியிருப்பதாகவும், அதற்காக வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், தமிழகத்தில் சில விஷயங்கள் இன்னும் சீரடைய வேண்டியிருந்தாலும், தற்போதைக்கு முதல்வர் விஜய் சிறப்பாக செயல்படுகிறார் என்று கூறினர். அவரைப் பற்றி நல்ல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அந்த வகையில் தமிழகத்திற்காக மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தனர்.