சென்னை: வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை எழுதிய Unfinished Hope (நிறைவேறாத நம்பிக்கை) என்ற நூல் விரைவில் வெளியாக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், இந்தப் புத்தகம் தற்போது அமேசானில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது என்றும், விரைவில் வழக்கமான புத்தகக் கடைகளிலும் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
நூலின் கருத்தை விளக்கும்போது, பெருமை கொள்ளத்தக்க பல விஷயங்களை வழங்கும் அதே நேரத்தில் பல கேள்விகளையும் எழுப்பும் ஒரு நாட்டின் சித்திரத்தை வரைவதற்கான முயற்சியே இந்தப் புத்தகம் என அண்ணாமலை கூறினார். இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆற்றல் இருப்பதாகவும், அதில் பெரும்பகுதி இன்னும் முழுமை பெறாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பெருமிதம் கொள்ளும் அம்சங்களும், நிறைவேறாத எதிர்பார்ப்புகளும் நூலில் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டிய கடமை உள்ளது என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
மேலும், புத்தக விற்பனையிலிருந்து கிடைக்கும் வருவாய் முழுவதும் வீ தி லீடர்ஸ் அமைப்பு மேற்கொள்ளும் சமூக நலப் பணிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.





