அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. இந்த தொடர் தென் ஆப்ரிக்கா, நமீபியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது; அக்டோபர் 2ல் தொடங்குகிறது.

மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணி இடம்பெற்றுள்ளன.

குரூப் பி-வில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணி இடம் பெற்றுள்ளன. அக்டோபர் 2ல் தொடங்கும் முதல் போட்டியில் தகுதிச் சுற்றில் தேர்வாகும் அணி விளையாடுகிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 7ல் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா–பாகிஸ்தான் மோதல் அக்டோபர் 10ல் நடைபெறுகிறது.

இறுதிப்போட்டி நவம்பர் 21ல் ஜோக்கன்னஸ்பெர்க் நகரில் நடைபெறும் என அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.