அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதல்வர் விஜய் புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார்.

மாமண்டூர் பகுதியில் நடைபெற்ற ரோடு ஷோவில், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தவெக ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அந்நிகழ்வின்போது, ஒரு தொண்டர் வழங்க முயன்ற முருகர் சிலை கூட்ட நெரிசலில் கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வாகனத்தை நிறுத்திய முதல்வர் விஜய், அதை மீண்டும் அன்புடன் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து தெருத் தெருவாக சென்று பிரசாரம் செய்த அவர், விவசாயிகளை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார். மேலும் ஒரு தேநீர் கடையில் டீ அருந்தியபடியும் மக்களிடம் பேசினார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான பிரசாரம் அக்டோபர் 4ஆம் தேதி மாலை நிறைவடைய உள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு தாராபுரம் நகர பகுதியில் ரோடு ஷோ மூலம் முதல்வர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.