புதுடில்லி: துருக்கியிலிருந்து போதைப்பொருள் கடத்தல் கும்பலின் முக்கியத் தலைவனாக கூறப்படும் நவ்ரீத் சிங்கை இந்தியாவுக்கு நாடு கடத்தியது “வரலாற்று மைல்கல்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

சமூக வலைதளப் பதிவில் அவர் கூறியதாவது: ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு தொடர்ந்து போதைப்பொருட்களை கடத்தி வந்த வலையமைப்பில் நவ்ரீத் சிங் முக்கியப் பங்கு வகித்ததாகவும், போலி அடையாளத்தை பயன்படுத்தி துருக்கி குடியுரிமை பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

ஹெராயின் மற்றும் மெத்தாம்பேட்டமைன் கடத்தலில் அந்த கும்பல் ஈடுபட்டதாகவும், நவ்ரீத் சிங்கின் உண்மையான அடையாளத்தை கண்டறிந்து நாடு கடத்தலை உறுதி செய்ய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்ததாகவும் அமித்ஷா கூறினார்.

இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட நவ்ரீத் சிங், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பங்காற்றிய அமைப்புகளை அவர் பாராட்டினார். மேலும், டிசம்பர் 2029க்குள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிக்க அரசு உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.