புதுடில்லி: ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மிட் மச்சார் அசாதாரண துணிச்சல் மிக்கவர் என இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடுவானில் விமானத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலின்போது அந்த விமானி மன உறுதியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், ஃப்ளைதுபாய் விமானிகள் தைரியமானவர்கள் என்றும், விமானப்படையைப் பொறுத்தவரை இதுபோன்ற அச்சுறுத்தல்கள் இதுவரை உருவாகவில்லை என்றும் கூறினார்.
அந்த சம்பவத்தில் ஸ்மிட் மச்சார் காட்டிய உடல் திறன், மன உறுதி மற்றும் சமயோசிதம் மற்ற விமானிகளுக்கு ஒரு பாடமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.





