புதுடில்லி: “இன்று இளைஞர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள்” என குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

நாட்டின் முக்கிய நிகழ்வுகள், அரசுத் திட்டங்கள், கலாசாரப் பண்டிகைகள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.

அதில் குறிப்பாக இளைஞர்களுடன் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் படங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன.

அக்டோபர் 2 அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள காந்தி ஸ்மிருதியில் இளைஞர்களுடன் கலந்துரையாடிய தருணங்களின் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

“இன்று இளைஞர்களுடன் மகிழ்ச்சியான தருணங்கள்” என்ற அவரது பதிவுடன் வந்த இந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.