இஸ்ரேல் நோக்கிச் சென்ற பிளை துபாய் விமானத்தில் நடந்த சம்பவத்தில் ஈரானின் தொடர்பு உறுதியாகும் பட்சத்தில் “கடும் தாக்குதல்” நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

செய்தி விவரப்படி, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு 180 பயணிகளுடன் சென்ற விமானத்தில், துணை விமானி ஒருவர் முதன்மை விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

தாக்குதலுக்கிடையிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக முதன்மை விமானி செயல்பட்டதாகவும், இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈரானுக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்காவும் இஸ்ரேலும் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டிரம்ப் தெரிவித்தார்; தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ஈரான் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.

விசாரணையில் ஈரான் தொடர்பு உறுதியானால், அந்த நாடு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் கூறினார்.