சென்னை: கடந்த நான்கு மாதங்களில் மக்களுக்கு நான்கு “நல்ல திட்டங்கள்” வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தெரிவித்தார். இதை விளக்கும் வகையில் அவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், 2026 ஜூன் 9 அன்று தொடங்கப்பட்ட “சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை” திட்டம் இடம்பெற்றுள்ளது.

மேலும், 2026 செப்டம்பர் 22 அன்று “காமராஜர் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கம் செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து 2026 செப்டம்பர் 28 அன்று “தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம்” தொடங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், 2026 அக்டோபர் 2 அன்று “வெற்றி பயணத்திட்டம்” தொடங்கப்பட்டதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார்.

வீடியோவுடன் வெளியிட்ட பதிவில், “நான்கே மாதங்களில் நனிசிறக்கும் நான்கு திட்டங்கள்; மக்களுக்காக… மக்களுடன்…” என முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.