பிளைதுபாய் விமானத்தின் இந்திய கேப்டன் ஸ்மிட் மச்சார், 174 பேருடன் விமானம் 34,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்த போது காக்பிட்டில் ஏற்பட்ட பதற்றமான சம்பவத்தை விவரித்துள்ளார்.
அவர் கூறியதன்படி, ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி பிரார்த்தனை செய்ய எழுந்தார். அது வழக்கமான பயணம் போலவே இருந்ததால், மரியாதை காரணமாக தாம் முன்பக்கத்தையே கவனித்ததாகவும் தெரிவித்தார்.
சில நிமிடங்களில் தலையின் பின்பக்கத்தில் பலத்த அடி விழுந்ததாகவும், முதலில் விமானத்துக்கு ஏதோ பெரிய சேதம் ஏற்பட்டதாக நினைத்ததாகவும் அவர் கூறினார். பின்னர் தாக்குதல் தொடர்ந்ததால், அது துணை விமானியிடமிருந்து வந்தது என்பதை உணர்ந்து தடுக்க முயன்றபோது பார்வை மங்கியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் விமானம் செங்குத்தாகக் கீழே இறங்கியதை உணர்ந்ததாகவும், பயணிகள் பீதியில் அலறியதாகவும் அவர் கூறினார். வெளியிலிருந்து குறியீடு மூலம் காக்பிட் கதவைத் திறக்க முயன்ற சக ஊழியர்களை அந்த துணை விமானி அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இறுதியாக கைப்பிடியை அடைந்து தமது மீதமிருந்த பலத்துடன் கதவைத் திறந்ததாகவும், பின்னர் மற்றவர்கள் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார். இச்சம்பவ விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசிய போது தெரிவித்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





