ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், வரவிருக்கும் இடைத்தேர்தல் தமிழக அரசியலில் “திருப்புமுனை” உருவாக்கும் என்று தெரிவித்தார்.

தமிழக வெற்றிக்கழகம் (தவெக) ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தி வருவதாக கூறிய அவர், தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக கட்சித் தலைவர் மற்றும் முதல்வர் ரோடு ஷோ நடத்த உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தாராபுரம் தொகுதி சிறப்புமிக்க, வரலாறு படைக்கும் தொகுதியாக அமையும் என்றும், முதல்வரை காண மக்கள் எங்கும் ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றி தமிழக வரலாற்றில் இடம்பெறும் வகையில் இருக்கும் என்றும், அடுத்த இடைத்தேர்தலில் திமுக அல்லது அதிமுக போட்டியிடாத அளவுக்கு தவெக வெற்றி வாகை சூடும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கணித்தார்.