மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவடையும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்காளர்களின் தன்மானத்தை “விலை பேசியுள்ளனர்” என்று குற்றம்சாட்டி, மக்கள் வலுவான தீர்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
“மானமிக்க மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களே” என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவில், ஆளுங்கட்சியின் ஆணவத்திற்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் கூறினார். தற்போதைய ஆட்சி மக்களுக்கு நன்மை செய்வதற்காக அமைக்கப்படவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், “மாபியா கும்பல்கள்” தமிழகத்தை கொள்ளையடிக்கின்றன; மாநிலத்தை பின்நோக்கி அழைத்துச் செல்லும் நிலை உருவாகும் எனவும் அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியை காப்பாற்ற எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது பற்றியே ஆளுங்கட்சியின் கவனம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆளுங்கட்சியினரின் ஆணவத்துக்கும், வேட்பாளரின் துரோகத்துக்கும் மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும், அப்படி செய்தால்தான் இனி அநியாயம் நடக்காது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.





