ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில், இந்தியா முன்வைத்த போர் நிறுத்த முன்மொழிவை பரிசீலிக்க தயாராக இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், போர் நிறுத்தம் தொடர்பாக மொத்தம் நான்கு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாகவும், அவை இந்தியா, துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்காவிடமிருந்து வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அவற்றில் அதிக விஷயங்களை உள்ளடக்கியதும், மிக விரிவானதாகவும் இருப்பது இந்தியாவின் முன்மொழிவே என அவர் குறிப்பிட்டார்.
மேலும், எரிசக்தி தொடர்பான போர் நிறுத்தம் மற்றும் கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் போன்ற அம்சங்களில் தயாராக இருப்பதாகவும், போர் நிறுத்தத்தின் பல்வேறு வடிவங்களை கருத்தில் கொள்ள முடியும் எனவும் அவர் கூறினார்.
இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை தேடும் முயற்சிகள் தொடரும் நிலையில், போர் நடவடிக்கைகள் தொடர்வதற்கிடையே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.





