விமான எரிபொருள் (ATF) விலை உயர்வின் எதிரொலியாக, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கான கட்டணத்தை உயர்த்துவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டண உயர்வு அக்டோபர் 6 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்தது. இண்டிகோ உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகளை இயக்கி வருகிறது.

உள்நாட்டு பயணங்களில், 500 கி.மீ வரை ரூ.375, 501 முதல் 1,000 கி.மீ வரை ரூ.600, 1,501 முதல் 2,000 கி.மீ வரை ரூ.1,150 மற்றும் 2,000 கி.மீக்கு மேல் ரூ.1,300 என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பயணங்களில், தெற்காசிய நாடுகளுக்கு 500 கி.மீ வரை ரூ.1,000 மற்றும் அதற்கு மேல் ரூ.3,000 வசூலிக்கப்படும். தென்கிழக்கு ஆசியா, வளைகுடா, வடக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ரூ.5,500 மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரூ.10,000 எரிபொருள் கட்டணமாக வசூலிக்கப்படும் என இண்டிகோ தெரிவித்துள்ளது.