இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி சென்ற பிளைதுபாய் விமானத்தில் கடத்தல் முயற்சி நடந்ததாகவும், ஓமனைச் சேர்ந்த துணை விமானி அல் ஹம்மாமி இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாரை தாக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதலில் கேப்டனுக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கோடாரி தாக்குதலால் மண்டை ஓட்டில் முறிவு ஏற்பட்டதாகவும், படுகாயம் அடைந்த நிலையிலும் அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு முயற்சியை முறியடித்ததாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்மிட் மச்சாருக்கு சவுதி அரேபியாவில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. மண்டை ஓட்டில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைத்த பிறகு, மேல்சிகிச்சைக்காக அவரை மருத்துவர்கள் விமானத்தில் ஐக்கிய அரபு எமீரேட்சுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும் கை, கால்கள், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவர் விரைவாக குணமடைந்து வருவதாகவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





