ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் பெயரில், மருத்துவம், இயற்பியல் உள்ளிட்ட ஆறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான விருதாளர்களின் பெயர் அறிவிப்பு அக்டோபர் 5 அன்று தொடங்கியது. அதில் முதலில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு பெறுபவரின் பெயர் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அக்டோபர் 6 அன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் விஸ்கான்சின்–மேடிசன் பல்கலையில் பணியாற்றும் பெல்ஜிய இயற்பியலாளர் பிரான்சிஸ் ஹால்ஸென் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘ஐஸ் கியூப்’ நியூட்ரினோ ஆய்வகத்திற்கு அவர் செய்த பங்களிப்பு மற்றும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்களை கண்டறிந்ததற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





