ஜப்பானில் ஒரு மெத்தை நிறுவனம் நடத்திய வித்தியாசமான போட்டி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போட்டியின் மையக் கருத்தே ‘சீக்கிரம் தூங்க வேண்டும்’ என்பதுதான்.
நிறுவனத்தின் மெத்தைகளில் படுத்தவுடன் விரைவாக தூங்க வேண்டும்; அதுவும் ஆழ்ந்த தூக்கமாக இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. வெறும் நடிப்பாக தூங்குவது போதாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஏமாற்றம் நடக்காமல் இருக்க, ஒவ்வொரு பங்கேற்பாளரின் தலையிலும் தூக்கத்தை கண்டறியும் கருவி பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உண்மையில் தூங்குகிறார்களா என்பதை கண்காணித்தனர்.
இந்த போட்டி விளம்பர நோக்கத்திலும் நடத்தப்பட்டாலும், ஜப்பானில் பலர் தூக்கக் குறைவால் அவதிப்படுகின்றனர் என்பதால் ‘நன்றாக தூங்குவதின் அவசியத்தை’ வலியுறுத்தவே இதை நடத்தினோம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற சுய்மி என்ற பெண்ணுக்கு முதல் பரிசாக ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. அந்த தொகையை ‘இளவரசியின் மெத்தை போல’ ஒரு மெத்தை வாங்க பயன்படுத்துவேன் என்று அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





