ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் தொடர்புடைய மோதலில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து புதிய அறிக்கை ஒன்று வெளியானது.

அந்த அறிக்கையின் தகவல்படி, பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதுடன், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இம்மோதலில் ஏற்பட்ட சேதம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில், இப்போது வெளியான அறிக்கை விமான இழப்புகளை பட்டியலிட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 12 எப்-15இ போர் விமானங்கள், 1 எப்-35ஏ, 2 ஏ-10 தண்டர்போல்ட் விமானங்கள், 7 வானில் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் 1 இ-3 சென்ட்ரி வான்வழி முன் எச்சரிக்கை/கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை இழந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் 2 எம்சி-130ஜே சிறப்பு நடவடிக்கை விமானங்கள் மற்றும் 1 எச்எச்-60டபிள்யூ ஹெலிகாப்டரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களில் 3 எம்கியூ-4சி நீண்ட தூர ட்ரோன்கள், 45 எம்கியூ-9 ரீப்பர் ட்ரோன்கள், 1 ஏஎச்-64 அப்பாச்சி, 4 லிட்டில் பேர்ட் இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 1 எம்எச்-60 சீ ஹாக் கடற்படை ஹெலிகாப்டர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஈரானில் அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்களின் செலவு 6 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதாகவும், இந்த போரில் அமெரிக்காவுக்கு மொத்தமாக சுமார் 3.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 3.19 லட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.