அக்டோபர் 8 அன்று ஆண்டுதோறும் விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய விமானப்படை வீரர்களின் சேவை மற்றும் தியாகத்தை போற்றும் நாளாக இது கடைப்பிடிக்கப்படுகிறது.
விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், “விமானப்படை வீரர்களைக் கண்டு இந்தியா பெருமை கொள்கிறது” எனக் கூறி, நாட்டின் வான்பரப்பை பாதுகாப்பதில் அவர்கள் காட்டும் துணிச்சலும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது என தெரிவித்தார்.
பாதுகாப்புப் பணிகளுடன் சேர்த்து, இயற்கை பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளிலும் விமானப்படையினர் ஈடுபடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனாதிபதி திரவுபதி முர்மு விமானப்படை தினத்தை முன்னிட்டு அனைத்து விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார். இந்திய விமானப்படை நாட்டிற்கு முன்மாதிரியான சேவையை ஆற்றியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், “ஆபரேஷன் சிந்தூர்” ராணுவ நடவடிக்கையின் போது நாட்டை பாதுகாப்பதில் விமானப்படை வீரர்களின் துணிச்சல் நிரூபிக்கப்பட்டதாகவும், அவர்களின் அர்ப்பணிப்பு நாட்டிற்கு உத்வேகமாகவும் பெருமையாகவும் இருப்பதாகவும் முர்மு குறிப்பிட்டார்.





