பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா 9,471 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் சுமார் 18 ஆயிரம் ஓட்டு முன்னிலை பெற்று வெற்றியை உறுதி செய்தார்.

முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களுடன் சேர்ந்து முதல்வரும் தனது பாணியில் வெற்றியை கொண்டாடியதாக கூறப்படுகிறது; இதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.