ரியாத்: சவுதி அரேபியாவில் வசிக்கும் இந்தியர்கள் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகி, அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியர்கள் விழிப்புடன் இருந்து, தேவையான நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ வழிகளில் வழங்கும் அறிவுறுத்தல்களை கடைப்பிடிக்கவும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தற்போதைய சூழல் தொடர்பான வீடியோ அல்லது செய்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகமும், ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் தேவைக்கேற்ப புதிய தகவல்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் என தெரிவித்தன. 24 மணிநேர கட்டணமில்லா அவசர உதவி எண் 8002471234 செயல்பாட்டில் இருப்பதாகவும், புதுப்பிப்புகளுக்காக தூதரகத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களைப் பின்தொடருமாறும் கூறப்பட்டுள்ளது.