டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் கவுஷிகி தயானியின் ஐபோன் சில வாரங்களுக்கு முன்பு திருடுபோனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருடப்பட்ட போனை யாரும் பயன்படுத்த முடியாத வகையில், அவர் ரகசிய பாஸ்கோடு மூலம் அதை உடனடியாக ‘லாக்’ செய்து வைத்தார். ஆனால் பின்னர் அவர் பயன்படுத்தும் மற்றொரு போனுக்கு சில மெசேஜ்கள் வந்தன; அவை திருடிச் சென்றவரிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது.
அந்த மெசேஜ்களில், ஐபோனின் பாஸ்கோடு வேண்டும் என்று திருடன் மீண்டும் மீண்டும் கேட்டதாகவும், பாஸ்கோடு இல்லாமல் வெறும் போன் இருந்தால் என்ன பயன் என்ற வகையில் குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து வந்த மெசேஜ்களால் மனஅழுத்தமடைந்த கவுஷிகி, போலீஸ் நிலையத்துக்குச் சென்று மீண்டும் புகார் அளித்தார். மேலும், திருடர்களுக்கு பயமே இல்லாமல் போய்விட்டதாகவும், உத்தரகாண்ட் போலீசால் தங்களை பிடிக்க முடியாது என்று அவர்கள் நம்புகிறார்கள் போல இருப்பதாகவும் அவர் பதிவில் வருத்தம் தெரிவித்தார்.





