ஸ்பேஸ்-எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை, “நவீன கால தாமஸ் ஆல்வா எடிசன்” எனவும், அமெரிக்காவின் “விலைமதிப்பற்ற பொக்கிஷம்” எனவும் அதிபர் டிரம்ப் புகழ்ந்தார்.

வாஷிங்டனில் நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், அமெரிக்காவின் சிறந்த அறிவியலாளருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக குறிப்பிடப்படும் ‘தேசிய அறிவியல்’ பதக்கத்தை டிரம்ப், மஸ்க்கிற்கு வழங்கி கவுரவித்தார்.

அதே பதக்கம் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், என்விடியா தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங், ஏ.எம்.டி. தலைமை நிர்வாக அதிகாரி லிசா சு ஆகியோருக்கும் வழங்கப்பட்டது.

மேலும், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்ய நாதெள்ளா மற்றும் டெல் நிறுவனர் மைக்கேல் டெல் ஆகியோருக்கு தேசிய தொழில்நுட்பம் மற்றும் புதுமைக்கான பதக்கம் வழங்கப்பட்டது.

விருது பெற்ற ஆறு பேரில் ஐந்து பேர் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்கள் என்பதும் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.