ஸ்ரீவைகுண்டம் த.வெ.க. எம்.எல்.ஏ. சரவணன் (35) மீது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின வாலிபர் ஒருவர் ரூ.60 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

ஏரல் அருகே அம்பாள்தோப்பு பகுதியைச் சேர்ந்த வைணவபெருமாள் (34), சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோவில், தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழுவில் உறுப்பினர் பதவி வாங்கித் தருவதாக கூறி எம்.எல்.ஏ. ரூ.60 ஆயிரம் பெற்றதாக குற்றம்சாட்டினார்.

பின்னர் அந்த பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதாகவும், பணத்தை திருப்பிக் கேட்டபோது மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் கூறி, பணத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ. சரவணன், அந்த பணத்துக்கும் தன்னுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார். தன்னுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறி சிலர் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளதாக கூறிய அவர், தனது பெயரை சொல்லி வேலை அல்லது பதவி வாங்கித் தருவதாக யாரேனும் கூறினால் நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.