வார இறுதி நாளான இன்று (அக்.10) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. இதனால் சவரன் ரூ.1,11,040-க்கும், கிராம் ரூ.13,880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரங்களின் தாக்கத்தால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்க விலை ஏற்றம்-இறக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்.08 அன்று தங்கம் கிராம் ரூ.13,710-க்கும், சவரன் ரூ.1,09,680-க்கும் விற்பனை ஆனது. அடுத்த நாள் அக்.09 அன்று கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.13,815-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.1,10,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.





