தலைநகர் டில்லியில் கரப்பான் கட்சி நடத்த திட்டமிட்டுள்ள போராட்டத்தை முன்னிட்டு, பெருமளவில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், “இத்தனை போலீஸ் பாதுகாப்பு ஏன்?” என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
அதிகாரிகள் கூறுவதன்படி, கடந்த முறை தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பின்னர் அந்த நிகழ்வில் குற்றப்பின்னணி கொண்ட பலர் கலந்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்தது.
தானியங்கி அடையாளம் காணும் கேமராக்களின் உதவியுடன், சுமார் 2,000 பேர் அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கடும் குற்றங்களில் தொடர்புடையவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த முறை நடைபெற உள்ள போராட்டத்திலும் வன்முறை நிகழ வாய்ப்பு இருப்பதாக போலீசார் கணிக்கின்றனர். அதனால் முன்கூட்டியே திட்டமிட்டு 25,000 போலீசாரை பணியில் ஈடுபடுத்தியுள்ளதுடன், நகரின் பல பகுதிகளில் ஏ.ஐ. தொழில்நுட்ப கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.





