விமானப் பயணத்தின் போது இஸ்ரேலிய பயணிகளை காப்பாற்றிய தீரச் செயலுக்காக பாராட்டைப் பெற்ற இந்திய விமானி ஸ்மிட் மச்சார், தற்போது மருத்துவமனையில் உடல் நலம் தேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை பாராட்டி சமூக வலைதளங்களில் பலரும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
மேலும், மச்சாரை விருது வழங்கி கவுரவிக்க உள்ளதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானத்தில் உயிருக்கு போராடிய தருணத்தில் ‘அனுமன் சாலிஸா’ பாடலை உச்சரித்து தைரியம் பெற்றதாக மச்சார் கூறியிருந்தார். அந்த கருத்து இஸ்ரேலியர்களில் பலரை நெகிழ வைத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மச்சாருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இஸ்ரேலிய பாடகர் பென் ராய்விட்ஸ் ‘அனுமன் சாலிஸா’ பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த பாடலை மச்சாருக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்; வீடியோ சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.





