“மாணவர்களின் குரல்” என்ற பெயரில் நாடு முழுவதும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடும் பயணத்தை காங்கிரஸ் எம்பி ராகுல் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை தீவுத்திடலில் இன்று மாலை மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சிக்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் ராகுல் சென்னை வந்தார்.

சென்னை வந்த பின்னர், அவர் நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜயின் இல்லத்துக்கு சென்றார். அங்கு இருவரும் கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

பின்னர் முதல்வர் விஜயும் ராகுலும் ஒரே காரில் புறப்பட்டனர். பாலவாக்கத்தில் கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமானதாக கூறப்படும் ஹோட்டலில், முதல்வர் விஜய் ராகுலுக்கு விருந்தளித்தார்.