சென்னை: சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகளை கொண்டாடி, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டும் நாளாக இது கடைப்பிடிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
தனது அறிக்கையில், பெண் குழந்தைகள் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கும் உலகின் அழகுக்கும் இணையானவர்கள் என்றும், ஒரு பெண் குழந்தை பிறக்கும் போது அன்பும் கருணையும் ஆளுமையும் சேர்ந்தே பிறக்கின்றன என்றும் கூறினார்.
பெண் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வாழ்வு, தரமான கல்வி, பாதுகாப்பான சூழல், சம உரிமை மற்றும் முழுமையான சுதந்திரம் ஆகியவற்றை உறுதிசெய்வது நமது கடமையும் பொறுப்புமாகும் என்று முதல்வர் தெரிவித்தார்.
மேலும், பெண் குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகளித்து அவர்களின் முன்னேற்றத்திற்கு துணை நின்று, பாகுபாடற்ற சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.





