‘தினமலர்’ நாளிதழின் ஆண்டு சந்தாவுடன் கிடைத்த விபத்து காப்பீடு, மருத்துவ அவசரநேரத்தில் நேரத்துக்கு உதவியாக இருந்ததாக புதுச்சேரியைச் சேர்ந்த வாசகர் ஒருவர் தெரிவித்தார்.
பாகூர் கொம்யூன், மணமேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ராமகிருஷ்ணன் (59), கடந்த 15 ஆண்டுகளாக ‘தினமலர்’ வாசிப்பதாகவும், பொதுப் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் செய்திகளையும், குறிப்பாக ‘ஆன்மிக மலர்’ பகுதியையும் விரும்பிப் படிப்பதாகவும் கூறினார்.
அவர் கூறியதாவது: ஜூலை 17 அன்று மணமேடு பாலம் அருகே பைக்கில் சென்றபோது மழையால் வழுக்கி விழுந்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரி, மூலக்குளம் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து ‘பிளேட்’ பொருத்தப்பட்டது. இதற்காக ரூ.1.30 லட்சம் வரை செலவானதால் கடன் வாங்கி மருத்துவச் செலவுகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.
மே 1 அன்று உள்ளூர் ‘தினமலர்’ ஏஜன்ட் அருண் மூலம் ரூ.2,499 செலுத்தி ஆண்டு சந்தா எடுத்ததன் மூலம் காப்பீடு திட்டத்தில் சேர்ந்ததாக அவர் கூறினார். ‘தினமலர்’ அலுவலக ஊழியர்களிடம் விபத்து காப்பீடு தொடர்பான விவரங்களைப் பெற்று, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு மருத்துவ ஆவணங்களை சமர்ப்பித்ததாகவும், ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின் ஒரே வாரத்தில் ரூ.98,150 காப்பீடு தொகையாக வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று மாதமாக வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி இருந்த நிலையில் இந்த தொகை பெரிய உதவியாக இருந்ததாக கூறி, ‘தினமலர்’ நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தார்.





