பார்ச்சூன் வெளியிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான “ஆசியாவின் சக்திவாய்ந்த டாப் 10 வர்த்தக பெண்மணிகள்” பட்டியலில், எச்.சி.எல்.டெக் தலைவி ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். முதலிடத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் சு ஷான் கைப்பற்றினார்.

இந்தப் பட்டியலில் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி மற்றும் நிதிச் சந்தை சார்ந்த துறைகளில் செயல்படும் தலைவர்கள் பெரும்பான்மையாக இடம்பிடித்துள்ளனர்.

ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா, எச்.சி.எல் குழும நிறுவனர் ஷிவ் நாடாரின் மகள். ஜூலை 2020ல் தந்தைக்குப் பிறகு எச்.சி.எல்.டெக் தலைவியாக பொறுப்பேற்றார்.

அவர் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் பயின்றுள்ளார். மேலும் ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராக பணியாற்றுவதுடன், வனவிலங்கு பாதுகாப்புக்காக செயல்படும் ‘தி ஹேபிடாட்ஸ் டிரஸ்ட்’ அமைப்பையும் நிறுவியுள்ளார்.

பார்ச்சூன் 2026 – ஆசியாவின் டாப் 10 சக்திவாய்ந்த வர்த்தக பெண்மணிகள்

  1. டான் சு ஷான் – தலைமை நிர்வாக அதிகாரி, டிபிஎஸ் குழுமம் (சிங்கப்பூர்)
  2. கிரேஸ் வாங் – தலைமை நிர்வாக அதிகாரி, லக்சேர் பிரசிஷன் இண்டஸ்ட்ரி (சீனா)
  3. ஜௌ குன்பெய் – நிறுவனர், லென்ஸ் டெக்னாலஜி (சீனா)
  4. மெங் வான்ஜோ – தலைமை நிதி அதிகாரி, ஹுவாய் (சீனா)
  5. போனி ஒய். சான் – தலைமை நிர்வாக அதிகாரி, ஹாங்காங் எக்ஸ்சேஞ்சஸ் அண்ட் கிளியரிங் (ஹாங்காங்)
  6. மலினா நாய் – தலைமை நிர்வாக அதிகாரி, ஏஎஸ் வாட்சன் குழுமம் (ஹாங்காங்)
  7. வாங் பெங்யிங் – தலைவர், எக்ஸ்பெங் மோட்டார்ஸ் (சீனா)
  8. ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா – தலைவி, எச்.சி.எல்.டெக் (இந்தியா)
  9. மிட்சுகோ டோட்டோரி – தலைமை நிர்வாக அதிகாரி, ஜேஏஎல் (ஜப்பான்)
  10. ஜோயி வாட் – தலைமை நிர்வாக அதிகாரி, யம் சீனா (சீனா)