திருவனந்தபுரம்: வளைகுடா பகுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, கேரளாவில் இருந்து சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதற்கு பதிலடியாக சவுதி அரேபியாவின் ஒரு விமான நிலையம் மீது அடுத்தடுத்து இருமுறை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் மொத்தம் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் நிகழ்வுக்குப் பிறகு, பல நாடுகள் சவுதி அரேபியாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வருகின்றன. அதே வரிசையில், கேரளாவில் இருந்து இயக்கப்படும் வளைகுடா விமான சேவைகள் இன்று (அக்.11) முதல் அக்.13 வரை ரத்து செய்யப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொச்சியில் இருந்து தோஹா மற்றும் ராஸ் அல் கைமா செல்லும் சில விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.