எஸ்ஐஆர் பணியில் ஏற்பட்ட தவறுகள் வாக்குகளை பாதித்து தேர்தல் முடிவில் தாக்கம் ஏற்படுத்தியதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார். எஸ்ஐஆர் பணி நடைபெறாமல் இருந்திருந்தால் 170–180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஸ்ஐஆர் பணியில் தவறு நடந்ததாக முதன்முதலில் கூறியது தமிழக வெற்றி கழகம் தான் என கூறினார். எஸ்ஐஆருக்கு எதிராக தொடக்கம் முதலே தங்கள் கட்சி போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
எஸ்ஐஆர் பணியில் நடந்த தவறுகளால்தான் “இவ்வளவு ஓட்டுகள்” பாதிக்கப்பட்டதாக அவர் கூறினார். திமுக இவ்வளவு வெற்றி பெற முடிந்ததற்குக் காரணமே எஸ்ஐஆர் தான் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடிகள் அனைவருக்கும் தெரியும் என கூறிய அவர், அவை இல்லையெனில் திமுக 20 தொகுதிகள் கூட வென்றிருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.





