சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீண்டும் தாக்குதலுக்கு இலக்கானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக விமான நிலையத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்ற தாக்குதல் இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததாகவும், அதில் சவுதி விமானி உட்பட மூன்று பேர் உயிரிழந்து எட்டு பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடல் மற்றும் பாப் எல்-மண்டேப் ஜலசந்திப் பகுதிகளில் சவுதி தலைமையிலான கூட்டணி நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கான பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.





